108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் என்னும் பணி கோவில் கருட மண்டபம் அருகே கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது .
காணிக்கை என்னும் பணி முழுவதும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது .காணிக்கை என்னும் பணியில் சமூக ஆர்வலர்கள் ,கல்லூரி மாணவர்கள் , கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் .காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 68,10,246/-, தங்கம் 118கிராம் , வெள்ளி 410 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 372 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன என கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.