திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற மே-06 ம் தேதி அன்று நடைபெறுகிறது, வரும் 28-ம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில் கொடியேற்றம் அன்று முதல் சித்திரை தேர் திருவிழா உற்சவம் தொடங்கி மே – 8 ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று மதியம் நடைபெற்றது,

இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக சித்திரைத் திருவிழாவின் 9 ஆம் நாளான மே – 06ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *