காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால் விவசாயிகள் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்.பழனியாண்டியிடம் கோரிக்கை வைத்தனர், சட்டமன்ற. உறுப்பினர் பழனியாண்டி உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்க்கால்களை சீரமைத்தார்.

புதுவாத்தலை, ராமவாத்தலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி:- திருச்சி முக்கொம்பு மேலணையில் மூன்று சட்டர்கள், மற்றும் அதன் அடித்தளம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து வருகின்ற ஜனவரி மாதம் திறக்கப்படும் என தெரிவித்தார். உடன் இரண்டு பாசன வாய்க்கால் அணைக்கட்டு விவசாயிகள், கழக நிர்வாகிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்