108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி வரும் 24-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றம் செய்யப்பட்டன.

 

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவிஆணையர் அக்பர்அலி உத்தரவில் பேரில் அம்மாமண்டபம் முதல் ராஜகோபுரம், தெற்குவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பாதுகாப்பு பணியில் ஸ்ரீரங்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *