ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் இந்த ஆண்டு சங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து இதற்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுடன் சேர்ந்து இதை சிலாகிக்க வேண்டும் என்பதற்காக *A Flashback Of 2022 – 23 with Gratitude* என்ற நிகழ்ச்சி சங்க தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஊக்கத்தை போற்றி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த ஆண்டின் ஸ்ரீரங்கம்ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ரோட்டரி ஆண்டு தொடக்க முதலே ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் மக்களுக்காக செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் செயல்பட்டு வந்த திருச்சியின் என் டி வி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுதர்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து என்.டிவி மேலாளர் விஷ்ணு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது,
மேலும் தினமணி பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், திட்டங்களின் இயக்குனர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தினுடைய தலைவர் ரோடேரியன் சத்திய நாராயணன் அவர்களின் செயல்பாட்டை பாராட்டி பேசினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.