ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சில்லரை மருந்தக வர்த்தகத்தில் சிறப்பாக சேவையாற்றிவரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கமன்னார் அவர்களுக்கு *Pride Of Srirangam* விருதும், சிறிய ரக சிற்றுண்டி அங்காடி, ஒப்புல்லா டிபன் சென்டர் வைத்து சேவை புரிந்துவரும் வெங்கடேஷ், மற்றும் வசந்தி தம்பதியினருக்கு *Taste of Srirangam* என்ற விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் கரூர் Tex City ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *