ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள் . ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 14.12.2021 ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாநகரில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது . 13.12.2021-20.00மணி முதல் 14.12.2021-20.00 மணி வரை கரூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் முசிறி – நெ .1 டோல்கேட் வழியாக தஞ்சாவூர் செல்ல வேண்டும் . தஞ்சை , புதுக்கோட்டையிலிருந்து கரூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் சஞ்சீவி நகர் நெ .1 டோல்கேட் முசிறி வழியாக கரூர் செல்ல வேண்டும் . சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர் , கடலூர் , துறையூர் , அரியலூர் செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் அண்ணாசிலை ஓடத்துறை ஓயாமாரி ரோடு NH45 நெ .1 டோல்கேட் வழியாக சென்று வர வேண்டும் . கொண்டையம்பேட்டை சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் நகர பேருந்துகள் தவிர மற்ற நகர பேருந்துகள் அண்ணாசிலை ஓடத்துறை – ஓயாமாரி ரோடு NH45 – கொண்டையம்பேட்டை – நெ .1 டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் நகர பேருந்துகள் T.V கோவில் – மாம்பழசாலை வழியாக செல்ல வேண்டும் . சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலை -T.V கோவில் – காந்திரோடு – JAC கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் சென்று பக்தர்களை இறக்கிவிட்டு அம்மா மண்டபம் ரோடு மாம்பழசாலை – காவேரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும் . வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரும் பேருந்து மற்றும் வேன்கள் NH45 – CP 6 – கொள்ளிடகரை – பஞ்சகரையில் அமைந்துள்ள யாத்திரிநிவாஸ் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும் . மற்றும் நெல்சன் ரோட்டில் அமைந்துள்ள சங்கர் தோப்பு ( சிங்கபெருமாள் கோவில் ) உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும் . இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் பஞ்சகரை வழியாக வரும் அனைத்து இருசக்கர வாகனங்களும் மேலூர் நெடுந்தெரு மந்தை , மேலவாசல் வழியாக தெப்பகுளம் சுற்றி வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் திருவானைகோவில் , நெல்சன் ரோடு வழியாக ஸ்ரீமத் ஆண்டவர் கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும் . பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும் . எனவே ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களது இருசக்கரவாகனங்கள் , கார் , வேன் மற்றும் பேருந்துகளை மேற்கண்ட இடங்களில் நிறுத்தி பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை மூலம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்