கோ கோ என்பது பழங்கால இந்தியாவில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய இந்திய விளையாட்டு ஆகும் . இது இந்திய துணைக்கண்டத்தில் கபடிக்குப் பிறகு இரண்டாவது மிகவும் பிரபலமான பாரம்பரிய விளையாட்டு ஆகும் . கோர்ட்டின் இரு முனைகளிலும் இருக்கும் இரண்டு துருவங்களை இணைக்கும் ஒரு மையப் பாதையுடன் ஒரு செவ்வக கோர்ட்டில் கோ கோ விளையாடப்படுகிறது. ஆட்டத்தின் போது, துரத்தும் அணியிலிருந்து (தாக்குதல் அணி) ஒன்பது வீரர்கள் களத்தில் உள்ளனர்,
அவர்களில் எட்டு பேர் மத்தியப் பாதையில் (குனிந்து) அமர்ந்துள்ளனர், அதே நேரத்தில் தற்காப்பு அணியைச் சேர்ந்த மூன்று ஓட்டப்பந்தய வீரர்கள் கோர்ட்டைச் சுற்றி ஓடி, தொடப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். துரத்தும் அணியில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு வீரரும் தங்கள் அருகில் உள்ள சக வீரர்களின் எதிர் திசையை எதிர்கொள்ளுவார்கள்.
அப்படிப்பட்ட இந்த கோகோ விளையாட்டானது தமிழக முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே மிகவும் பிரபலமான விளையாட்டாகும்.. அதன்படி மாநில அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான கோகோ சாம்பியன்ஷிப் 2023 விளையாட்டு போட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கோகோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஸ்ரீ விக்னேஷ் குழும சேர்மன் கோபிநாதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருத்திகா முன்னிலை வகித்தார். இந்த கோகோ விளையாட்டு போட்டியில் சிபிஎஸ்சி பள்ளிகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றது.
மேலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகளும் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு சேப்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட உள்ளது. முன்னதாக விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.