தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும். உம்ரா புனித பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழில் உரிமை சான்றிதழ் வழங்கி தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். போலி நிறுவனங்களை கண்டறிந்து முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பல பெரு நகரங்களில் இருந்து இயங்குவது போன்று சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்கிட வேண்டுமென்று ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை இச்சங்கத்தின் மூலம் வலியுறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் ஜுபேர் பொருளாளர் மக்கா கலீல் துணைத் தலைவர்கள் முகமது யூசுப் முகமது பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *