திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெரு பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த ஹழ்ரத் மஹபூபே சுபுஹானி நிஷான் ( கொடி மரம் ) சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு இறைநேசப் பிரச்சார பேரவையின் அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில செயலாளர் சௌபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக அரியமங்கலம் கருணாநிதி நகர் முன்பிலிருந்து புனிதமிக்க தீன் கொடியை மேல தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர்சாதிக் பாட்சா பாவா கலந்து கொண்டு புனிதமிக்க தீன் கொடியை ஏற்றி சிறப்பித்தார்,
விழாவில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காஜா சாஹிப், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில தலைவர் ஜெகபர் சாதிக், செயலாளர் பஷீர், மற்றும் உலமாக்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்