ஹிஜாப் என்னும் தனிமனித உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் துரைசாமிபுரம் கிளையின் சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி துரைசாமி புரம் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சையது முஸ்தபா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் மைதீன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், துரைசாமிபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published.