மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் திருச்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் துரை வரவேற்புரையாற்றிட திருச்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மோகன், நிர்வாகி காசிமாயன் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்துள்ளதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 27 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,
ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.