திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி துணைத்தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, கவுன்சிலர் சுரேஷ், ஆகியோர் பேசினர்.
மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் பலமுறை 6-வது வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதே நிலை தொடர்ந்தால் வருகிற 2026 தேர்தலின்போது எங்கள் பகுதியில் கருப்பு கொடியேந்தி எதிர்ப்பு தெரிவிப்போம் என தெரிவித்தனர்.
இதில் ஏ ஐ எஸ் எப் மாநில தலைவர் இப்ராஹிம், மாநில துணைத்தலைவர் செல்வகுமார், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் ராமராஜ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பார்வதி, மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி , மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.