அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக ஆட்சியின் போது செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பொதுமக்களுக்கு செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வியாபாரிகளுக்கு புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்த், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..