அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன், பொருளாளர் ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பரமசிவம், மாவட்ட கழக அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், மாவட்ட கழக இணைச் செயலாளர் ஜாக்குலின், மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் வனிதா , மாவட்ட கழக துணைச் செயலாளர் பத்மநாதன் பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, ஏர்போர்ட் விஜி, எம் ஆர் முஸ்தபா
மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சசிகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், டி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.