விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி இதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் வயது (58) தனது வீட்டில் யாரும் இல்லாத போது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த நாகராஜனை மீட்டு சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் சாத்தூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் பணி ஒய்வு பெற இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் நாகராஜன் உயிரிந்தது, நகராட்சி ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.