அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் துணை மேயரும், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் விஜி முன்னிலை வகித்தார்.

மேலும் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையும், அபிஷேக ஆராதனையும், நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் MP, கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் கொரடா மனோகரன், ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, இன்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *