அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளில் அவருக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்