அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் படி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சிந்தாமணி வி பி எஸ் மகாதேவன் மற்றும் அதிமுகவினர் ஒன்று கூடி திருச்சி தெப்பக்குளம் அருகே பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் அதனைத் தொடர்ந்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவுன்சிலர் அரவிந்த்:-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் இந்த வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது. கழக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு இந்த வெற்றி மகத்தான வெற்றி ஆகும். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொண்டர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒன்றுபட்டு இந்த கட்சியை வலுப்படுத்துவோம். வருகின்ற பாராளுமன்ற 2024 தேர்தலில் 40க்கு 40 வென்றெடுத்து எடப்பாடி யாரிடம் சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்தார்.