தமிழக அதிமுகவில் தற்போது ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் ஆகியோரின் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநகரான ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், தில்லை நகர் பகுதி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்ட இருவரின் புகைப்படங்களையும் இரட்டை இலையில் ஒன்றாக இருப்பதுபோல் படம் போட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்ற வாசகம் அடங்கியுள்ள போஸ்டரை திருச்சி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயலாற்ற வேண்டுமென எண்ணத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் இரட்டை தலைமை ஏற்கவேண்டும் என்ற போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.
தற்போது இன்று காலை திருச்சி கண்டோன்மென்ட் அருகே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் புகைப்படத்தில் ஓபிஎஸ் படத்தை மட்டும் கிழித்துள்ளனர். படத்தை கிழித்தது மர்ம நபர்களா? அல்லது ஈபிஎஸ் ஆதரவாளர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒபிஎஸ் படம் கிழித்துள்ளதால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.