தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றனர்.