அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் காதி கிராப்ட்டில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தனர் இந்நிகழ்வில் கதர் கிராமத் தொழில்கள் மண்டல துணை இயக்குநர் பாலகுமாரன், உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன்,நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர்,
காந்தியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கதர் விற்பனையை வணக்கத்துக்குரிய மேயரும்,நானும் சேர்ந்து துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கதரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும், மகாத்மா காந்தியின் நினைவுகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கதர் விற்பனை தூக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 70 லட்சம் இதன் விற்பனை மூலம் பெறப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.மக்கள் அனைவரும் இந்த கதர் ஆடையை உடுத்தி காந்தியின் நினைவுகளை சேர்த்து காந்தி ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அந்நிய மரங்களை அப்புறப்படுத்தி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே என்ற கேள்விக்கு,
சாலை அமைக்கும் போது மரங்களை வெட்டாமல் மற்றொரு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லி யிருக்கிறார்கள். முடிந்த வரை அந்த மாதிரியான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.