அனைத்திந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 150 தோல் மருத்துவர்களுக்கு தோல் லேசர் மற்றும் அழகியில் செயற்பாட்டியல் குறித்த முகாம் திருச்சியில் நடைபெற்றது. இம்முகாமில் சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மாநந்தன்; செயலாளர் டாக்டர். சோபனா, பொருளாளர் டாக்டர்.அகிலா மற்றும் செயற்பாட்டியலின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அவிட்டஸ் அவர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து மூத்த பயிற்றுனர்கள் டாக்டர். காளிஸ்வரன், டாக்டர். குமரேசன், டாக்டர். கவிதா, டாக்டர் கார்த்திக்ராஜா டாக்டர். அவினாஷ், டாக்டர். பிரேம் குமார் , டாக்டர் . ராதா சுப்பிரமணியன் , உள்ளிட்டோர் அவர்களது அனுபவங்களை மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் டாக்டர் அவிட்டஸ் லேசர்களின் நேரடி விளக்கக்காட்சி சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தோல் மருத்துவர்களும் இந்த துறையில் புதிய நுட்பங்களை கற்று அறிந்தனர் இந்நிகழ்ச்சியின் முன்னதாக தோல் மருத்துவர்கள் அனைவரும் இந்த சிகிச்சையின் எவ்வித கல்வியோ பயிற்சியோ இல்லாமல் அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலி மருத்துவர்களைகளை எடுக்க உறுதிபூண்டனர்.