பொன்மலையில் அப்ரண்டிஸ் முடித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் வேலை வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
இதில் கடந்த 2008ல் பயிற்சி முடித்த ஆக்ட் அப்பிரண்டிஸ்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள 290 பேரை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் 12.4.2017 முன் தென்னக ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் பழைய முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.போலி ஆவணங்கள் தயார் செய்து தமிழக அப்ரண்டீஸ் மீது வழக்கு தொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குரூப் சி மற்றும் டி யில் தமிழக இளைஞர்களுக்கு பணி வழங்கி பிறமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்
ஆர்.ஆர்.பி யில் பயிற்சி முடித்த அப்ரண்டிஸ் களுக்கு 20% முன்னுரிமையை 50% இட ஒதுக்கீடாக மாற்ற வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீட்டை அந்தந்த மண்டலங்களில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தேர்வு இன்றி பணி நியமனம் செய்ய வேண்டும். 2019 வரை மற்ற மண்டலங்களில் பயிற்சி படித்த மாணவர்களை பணி நியமனம் செய்தது போல தென்னக ரயில்வே மண்டலத்திலும பணி நியமனம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவில் எந்த ஒரு இடத்திலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என்று இல்லாத நிலையில் ஏன் தென்னக ரயில்வேயில் மட்டும் பயிற்சி முடித்த அப்ரண்டீஸ் மாணவர்களை பணி நியமனம் செய்யவில்லை எனவும்
மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை நியமித்து தமிழக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறிக்காதே தென்னக ரயில்வே நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மேல் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை பயிற்சி முடித்த அப்ரண்டீஸ் மாணவர்கள் மேல் பொய்யுரைத்து பயிற்சி முடித்த மாணவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்காதே என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் சக்கரபாணி தலைமையில் பொன்மலை இரயில்வே ஆர்மரிகேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அப்ரண்டீஸ் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்