அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.ராய் பெர்னான்டோ தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் சேலம் தர்ஷிகா வயது(10) சிறுவயதில் இருந்தே யோகா, தியானம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்து சேலம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு தலையில் தக்காளி பழத்தை வைத்து முப்பத்தி ஒரு நிமிடம் (31) யோகாசனம் செய்து பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்காட்ஸ் இடம்பெற்று கேடயம் வழங்கப்பட்டது. திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி ஜெயக்குமார் என்பவரிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.

இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார்மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.

இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த சுகித்தாவுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டமும், மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் கலைமாமணி அன்பழகன் குப்புசாமி அவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நன்கு கற்றறிந்து தான் கற்ற சிலம்ப கலையை மலேசியாவில் 8 மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் சிலம்பக் கோர்வை கழகம் என்கிற அமைப்பைத் துவங்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது பல சிலம்ப போட்டிகளில் தனது மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்தும் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற வைத்ததைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது. மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அயோத்தி அவர்களின் மகன் ராஜலிங்கம் அவர்கள் மலேசியாவில் குடியுரிமை பெற்று மலேசியாவில் கடந்த 20 வருடங்களாக கம்யூனிகேஷன் துறையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மலேசியாவில் தனது தொழிலை திறம்பட நடத்தி வருகின்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவில் திறம்பட தொழில் செய்வதை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *