திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் திமுக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க கோரியும், பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன எனவே இதனை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்,
இது குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர் தலைவர் அம்பிகாபதி…திருச்சி மாவட்டத்தில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது எனவே குடிசைப் பகுதிகளில், அதிக அளவில் மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும், சதுர அடி கணக்கில் புதை வடிகால் மற்றும் தண்ணீர் வரி விதிக்கப்படும் என்ற தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வாதிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய, அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்…திருச்சியில் ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி, மறைந்த தமிழக முதல்வரால் துவங்கப்பட்டு, அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் நான்கரை ஆண்டு காலம் மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட, அம்மா உணவகங்களை மீண்டும் திறக்க வேண்டும், மேலும் தேவையான பகுதிகளில் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி வாதிட்டதாக தெரிவித்தார்.