திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு முடுக்கு பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 110 வருடங்களாக நான்காவது தலைமுறையாகவும் வீடு கட்டி பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த இடம் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடம் என்று சொல்லி அவர்களது வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் நோட்டீஸ் கொடுத்து உள்ளது ஆனால் அவர்கள் குடியிருக்கும் பகுதி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாகும்.
அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மின் இணைப்பு பாதாள சக்கடை ரேஷன் கார்டு ஆதார் அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவியுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வருகின்றனர். எனவே முடுக்குப்பட்டி குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் ரயில்வே உத்தரவை தடுக்க கோரியும் மேலும் அரசாணை 318 படி நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அவர்களுக்கு பட்டா வழங்கிடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.