மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின் படி 28.2.2024 அன்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது.

அனைத்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து வலிமையான ஒரு நிறுவனத்தை உருவாக்கிட வேண்டும்,அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தனியார்மய முயற்சியை கைவிட வேண்டும், ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை வங்கிகள் , LIC யை போல் 30% ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், பழைய பென்ஷன் அனைவருக்கும் அமல்படுத்தும் வரை புதிய பென்ஷன் திட்டத்தில் நிறுவன பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்திட வேண்டும்,

01.08.2022 முதல் நிலுவையிலுள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே துவக்க வேண்டும் , பாலிசிதாரர் நலன் காக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திருச்சி கன்டோன்மெண்டில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கள் , நலசங்கங்கள் , சார்ந்த தலைவர்கள் , பென்ஷனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சியுறை ஆற்றினர்.நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் சார்ந்த அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள் , பென்ஷனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்