இந்திய பொருளாதார வளர்ச்சியில் , மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மய படுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு , குறு நகரங்களில் அமைந்துள்ள பொது இன்சூரன்ஸ் அலுவல மூடல்களை கைவிட வேண்டும், உடனடியாக அனைத்து நிலைகளிலும் புதிய ஊழியர்கள் பணி நியமனம் செய்யப் வேண்டும் , புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும், அதுவரை புதிய பென்ஷன் திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்,

எல் ஐ சி மற்றும் வங்கிகளை போல் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் , 01.08.2022 முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுககான பேச்சு வார்த்தயை உடனே துவக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் 22/02/2022 வியாழக்கிழமை அன்று மாபெரும் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி – கன்டோன்மெண்டில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவின் போது அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நல சங்கங்களைச் சார்ந்த தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சி உரையாற்றினர். இந்த தர்ணா – ஆர்ப்பாட்டத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நல சங்கங்களை சார்ந்த அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் என பலர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *