இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு ஆகும். இது, பின்தங்கிய சமூகத்தினருக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு – கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் நிலையான தொழில் பாதைகளை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடியான சமூக நிறுவனம் AHCT வருடா வருடம் உத்தியோகு உட்சவ் எனும் தொழில் கண்ணோட்ட நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜக்ட் புத்ரி எனும் AHCT-யின் முன்னணி முயற்சியின் வாயிலாக, பள்ளியில் பயிலும் புத்ரி மாணவிகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ள இந்நிகழ்வு, பின்தங்கிய மாணவிகளை தொழில் நோக்கத்துடன் உருவாக்கி, அவர்களை பொருளாதார ரீதியாக சுயம் புரிதலிலும், சமூக ரீதியாக தன்னம்பிக்கையுடன் விளங்கிடவும் துணைபுரிகிறது. இந்த நிகழ்வில் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரின்சி மெர்லின் மற்றும் ஸ்ட்ரைவ் நிறுவனத்தின் இயக்குநர் (ஆப்பரேஷன்ஸ்) திரு. ஆட்ரியன் டொமினிக் பெரெய்ரா, திரு ரவீந்திரன் ஜெனரல் மேனேஜர், ஸ்ட்ராட்டஜிக் ஆப்பரேஷன்ஸ், BHEL நிறுவனம், திருமதி சாவித்ரீ சிவகுமார்-CFO, TrichyPlus ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று, உரையாற்றி, பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள். கல்லூரி முதல்வர் உரையாற்றி, பள்ளிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திரு. ஆட்ரியன், 7 திறமையான புத்ரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 10 பள்ளி மாணவிகளையும் உற்சாக மூட்டினார். டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் – AHCT நிர்வாக அறங்காவலர் மற்றும் அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் “உண்மையான அதிகாரமளித்தல் (Empowerment) என்பது பிறருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில்தான் உள்ளது. அது நமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல – பிறருக்கு பாதைகளைத் காண்பிக்கவும் வழி வகுக்கிறது. நீங்கள் உங்கள் சகோதரிக்கு, நண்பருக்கு, உங்கள் தெருவில் உள்ள சிறுமிக்கு வழிகாட்டும்போது, அந்த அலைகள் பெருகி, ஒரு சக்திவாய்ந்த அலைவீச்சாகி ஆயிரக்கணக்கான சிறுமிகளை முன்னேற்றும் சக்தியாக மாறும்,” என்றார். அவர் உத்தியோகு உட்சவ் என்னும் இந்நிகச்சி “கனவுகளுக்கான ஒரு தொடக்க மேடை” எனவும் கடந்த ஆண்டு கல்லூரி மாணவிகளுக்கென தொடங்கப்பெற்ற திறன் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற் (Nipuni Career Pathing) L வெற்றிக் கதைகளையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். ப்ராஜக்ட் புத்ரி – சாதனைகள் ப்ராஜக்ட் புத்ரி, தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள 22,000க்கும் மேற்பட்ட பின்தங்கிய சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என டாக்டர் சௌந்தர்யா கூறினார். 130க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் இந்த திட்டம், 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளைச் சேர்த்து, தலைமைத்துவம் முடிவு எடுக்கும் திறன், விமர்சன சிந்தனை, பொறுமை போன்ற 40 வகையான வாழ்க்கைத் திறன்கள் வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . மேலும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான உளவியல் (Psychometric) மதிப்பீடு அடிப்படையிலான தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

“நிபுணி திட்டம்” பள்ளிக்குப் பின் கல்வி பயணத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையே பாலமாக அமையும் நிபுணி Career Pathing திட்டம், தற்போது தமிழக கல்லூரிகளில் முன்னோடியாக செயல்படுகிறது. 2030-க்குள் 10,000 கல்லூரி மாணவிகளுக்கு திறன் பயிற்சி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் மட்டும், ₹78 லட்சம் கல்வி உதவி தொகை, தொழிற்பயிற்சி போன்றவை கலை மற்றும் அறிவியல், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. விழாவின் சிறப்புகள் புத்ரி மாணவிகளின் கூட்டு உறுதிமொழி (Puthri Pledge), இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிகளுக்கான பாராட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கான அங்கீகாரம் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின் உணர்வுபூர்வமான சாட்சியங்கள், முக்குலத்தோர் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ரென்ஷி ஏ.கலைசெல்வம் குழுவின் சுய பாதுகாப்பு பயிற்சி (Self-Defence Workshop) போன்றவை இந்நிகழ்ச்சியின்போது நடைபெற்றன. மேலும் பலதார பட்ட தொழிற் மற்றும் கல்வி நிறுவனங்களின் தகவல் பகிர்வு அமர்வுகள்(knowledge sharing sessions ) மூலம் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட, கல்லூரிகள், தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு, புத்ரி மாணவிகளுக்கு அறிய, அறிவு சார்ந்த மேடையினை ப்ராஜக்ட் புத்ரி திட்டம் அமைத்துக் கொடுத்தது

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ராஜக்ட் புத்ரி, இந்தியாவின் முதல் முயற்சியாக, 13 முதல் 18 வயதுள்ள பின்தங்கிய மாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை (Career Intentionality) உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. அவ்தார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் பற்றி சென்னையை தலைமையகமாகக் கொண்ட AHCT, பெண்களின் பொருளாதார வலிமை, பாலின சமத்துவம் மற்றும் வறுமை ஒழிப்பு நோக்கில் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகமும் மற்றும் புதுச்சேரியிலும் பணியாற்றி வருகிறது. “அவ்தார் பற்றி” 2000-ஆம் ஆண்டு டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் தொடங்கிய அவதார், இந்தியாவில் பன்முதன்மை (Diversity), சமத்துவம் (Equity), உள்ளடக்கம் (Inclusion) ஆகிய கருத்துகளை கார்ப்பரேட் உலகில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும் வேலை மற்றும் தொழில் செய்ய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பும் பெண்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பு வழங்கும் தளமாகவும் விளங்குகிறது. அவதார் நிறுவனம் 25-ஆம் ஆண்டை எட்டும் நிலையில், 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை, 20,000-க்கும் மேற்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகள், myAvtar.com இணையதளத்தின் மூலம் 1 லட்சம் பெண்கள் மீண்டும் தொழில் வாழ்க்கையில் பிரவேசம், 2 இலட்சம் பெண்களின் தொழில் நோக்க பயிற்சி போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *