தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் கல்வி தெய்வமாகிய “கலைமகள்” குடிகொள்வாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால் கல்வி கூடங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திறன்கள் வளரும் மகிழ்ச்சியாக கல்வி கற்க முடியும். தமது வகுப்பறையினையும் பாடசாலையினையும் சுத்தமாக வைத்து கொள்வது மாணவர்களின் தலையாய கடமையாகும் . தூய்மையான பள்ளிகள் மிகவும் சிறந்த மாணவர்களை இந்த சமூகத்துக்கு தரும் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தமது நாட்டையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் திருச்சி லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பள்ளி மாணவர்கள் அந்த பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியவர்களாக இருக்கின்றனர். எப்படி என்றால் தாங்கள் பயிலும் வகுப்பறையை கோவிலாக நினைத்து அந்த வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் சிறு சேமிப்பு தொகையை சேர்த்து அதன் மூலம் பெயிண்ட் வாங்கி வகுப்பறை சுவற்றில் வர்ணம் பூசி வகுப்பறையை புதுப்பித்துள்ளனர்.
மேலும் தினமும் காலையில் வந்தவுடன் ஒவ்வொரு வகுப்பறையிலும் மின்விளக்குகள், மின்விசிறி, ஐன்னல் திறந்து வைத்தல் உட்காருவதற்கு பெஞ்ச் அனைத்தும் ஒழுங்கான முறையில் அடுக்கி வைத்து பள்ளி அறையை தூய்மையாக வைத்துக் கொள்கின்றனர். இந்த நற்செயலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.