ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி , நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு, வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வாா்கள்.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். அதேபோல் கருட மண்டபம் காவேரி படியத்துறை மற்றும் ஓயமேரி காவிரி ஆற்றில் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் காவிரி தாயை வழிபட்டு ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.