திருச்சி மாநகர் மாவட்டம் ClTU ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- ஆட்டோ தொழிலாளிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக்கோரியும், டெல்லி, மஹாராஷ்டிரா அரசை போல் தமிழக அரசே தனியார் கம்பெனி பைக், டாக்ஸிகளை தடை செய்யக் கோரியும், கேரளா அரசைப் போல் தமிழக அரசும் ஆட்டோ செயலியை உடனடியாக துவங்கிட கோரியும், அநியாயமாக உயர்த்திய ஆட்டோ இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட கோரியும், நியாயமான ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த கோரியும், ஒன்றிய பிஜேபி அரசு அறிவித்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.