திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்ககோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துபொதுமக்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் வீரம் செறிந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழக முழுவதும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் போட்டியில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது .இதனால் போட்டி நடைபெறும் ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மாடுகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கும் டோக்கன் கிடைப்பதில்லை. ஆன்லைனில் முதலில் பதிந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற விதி கடைபிடிக்கப்படுவதில்லை. போட்டி நடத்துபவர்கள் விரும்புவர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் டோக்கன் கிடைக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் வரும் முறையை தவிர்த்து, உள்ளூர் மாடுகள், திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் 70 சதவீதம் உள்ளூர் காளைகளுக்கும், 30 சதவீதம் வெளி மாவட்ட காளைகளுக்கும் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புகளுக்கு மாதம்தோறும் ஒரு ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது ஜல்லிக்கட்டில் காளைகளுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
