உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் மோசடி படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்கள் வீரர்கள் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு துவங்கி பொதுமக்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர. இதனை தடுக்கும் விதமாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக சமூக வலைதளங்கள் நாளிதழ்கள் டிவிகளில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுடன் நட்பாக பழகி வந்தவர் ஆய்வாளர் உமாசங்கர். ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு இரு சக்கர வாகனத்தில் காக்கி உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து இவரது பெயரில் சில சமூக விரோதிகள் போலி முகநூல் கணக்கை துவங்கி இவரது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களிடம் பணத்தை பறித்து வருவதாக ஆய்வாளர் உமா சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.