தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இவரது குடும்பம் காங்கிரஸ் வழியில் வந்திருந்தாலும் கூட இவர் பாஜகவில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்தவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரது தாயார் காலமானதாக கண்ணீருடன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில்
என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் .என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார் என குறிப்பிட்டுள்ளார்.
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.