இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவியின் அறிமுக நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டராமன் ராமபத்திரன் நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவியை அறிமுகம் செய்து வைத்து கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

அதில், உள்ளங்கை அளவுள்ள இந்த சாதனமானது எங்கும் எளிதில் எடுத்து செல்லக்கூடியதாகும். AI நுட்பத்தில் செயல்படக்கூடியது. இணைய வழி உதவியுடன் நேரடியாக ECG ஒளிபரப்பு செய்து உடனடியாக அறிக்கை தரக்கூடியதாகும் என தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டடியூட் மருத்துவர் கோவிந்தராஜன், மருத்துவர் சிவம், பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன், மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா உள்பட மருத்துவத் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்