திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று திமுகவின் துணை பொது செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். மேலும் மகளிரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும், கருத்துக்களையும் கலந்தாலோசித்துள்ளனர். அதோடு வருகின்ற 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக மகளிரணி மாநாட்டில் மாவட்டம் தோறும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களை நேரில் சந்தித்து அழைப்புவிடுக்கும் கூட்டமாகவும் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,திமுக முதன்மைச் செயலாளரும்,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட செயலாளரும்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாக பங்கேற்றனர்..

திமுக மகளிர் அணி, துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பேட்டி : மகளிர்க்காண இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தொகுதி வாரியாக மது வரையறை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு இட ஒதுக்கீடு தேர்தலிலே நிர்ணயிக்கப்படும். அதன் பிறகு தான் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இது மசோதாவில் தெளிவாகப் பட்டிருக்கிறது. எப்போது கணக்கெடுப்பு தொடங்கி எப்போது முடியும் என்பது தெளிவு இல்லை. அதன் பிறகு பல சர்ச்சைகள் இருக்கக்கூடிய தொகுதி மறு பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறை படும் இது 30 ஆண்டுகாலம் ஆகலாம் இதற்கான காலம் யாருக்குமே தெரியாது. உண்மையாக இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்தத் தேர்தலில் வருவதற்கு வாய்பே இல்லை. எந்த தேர்தலில் வரும் என்று யாருக்கும் தெரியாது. இது வெறும் கண்துடைப்பு.தொடர்ந்து தலைவர்களை கொச்சைப் படுத்துவதும் இழிவு படுத்துவதும் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்றத்திலேயே மிக கொச்சையாக பேசியதை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து தலைவர்களை இழிவு படுத்துவதும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அதிமுக – பிஜேபி கூட்டணி குறித்து….அதிமுக சுயமரியாதை கட்சி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதில் நான் கருத்து கூற முடியாது. இப்போது தெரிந்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் உணர்வு இருக்கும்.

மகளிர் அணிக்கான ஒரு அங்கீகாரம் இருக்கிறது. முக்கியமான அணி என்றால் அது மகளிர் அணி தான்.சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் இந்தியா கூட்டணி பெண் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துகின்றோம்.உண்மையிலேயே பெண்கள் மசோதா கொண்டு வர வேண்டும் அப்போதுதான் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என திமுகவும் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.மகளிர்க்கு இன்னும் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சனாதன ஒழிப்பு எதிர்ப்பா என்ற கேள்விக்கு.. எத்தனையோ பிரச்சனை இருக்கின்றது. மணிப்பூர் வன்முறை குறித்து பேச மாட்டுகிறீர்கள், பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதுதான் எங்களுடைய கோரிக்கை. தேர்தல் என்று வரும் பொழுது யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, கூட்டணிக் கட்சிகள் எந்த தொகுதியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அத்துணை விஷயத்தையும் கலந்து ஆலோசித்து விட்டு தான் தலைமை ஒரு முடிவு எடுக்கும். காவிரி நீர் பிரச்சனைக்கு பாராளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு….. பாராளுமன்றம் நடந்தது மூன்று நாட்கள் தான், பாராளுமன்றத்தில் எதையுமே பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலு அவர்கள் பேசி இருக்கிறார்கள் மூன்று நாட்களும் கடிதம் எழுதி இருக்கிறார்.காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் அவர்கள் நிற்கவில்லை. இக் கூட்டத்தில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளீர் அணி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்