எச்டிஎஃப்சி வங்கியின் குழுத் தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

“எச்டிஎஃப்சி வங்கியானது நாட்டின் பின்தங்கிய இடங்களில் கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் நகர்ப்புற கிராமப்புற இடைவெளியைக்குறைக்கிறது. திருச்சியில் நடைபெறும் லோன் மேளா மூலம், கிராமப்புறங்களைச் சென்றடைந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பின்தங்கிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் கடன் கிடைக்கச் முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதே எங்களது பெரிய நோக்கம்”. NHM தமிழ்நாட்டில் வங்கியின் விநியோக வலையமைப்பு 202 நகரங்களில் 544 கிளைகளைக் கொண்டுள்ளது. 476 அலகுகளைக் கொண்ட வணிகவலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.

சமீபத்திய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு அறிக்கையின்படி, எச்டிஎஃப்சி வங்கி தமிழ்நாட்டில் உள்ள சிறுஉற்பத்தி நிறுவனங்களுக்கு 29 ஆயிரம் கோடி கடன்களை வழங்கிய முதன்மை வங்கியாகும். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 2.5 லட்சம் கிராமங்களுக்குவிவசாய நிதியை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த ஆண்டு, உத்திரபிரதேசத்தின் அயோத்தி பர்த்வான், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களிலும் லோன் மேளாக்களைநடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும்,

விவசாய உபகரணங்கள், விவசாயம் தவிரத்த மற்ற அனைத்து பிரிவினருக்கும் கடன்வழங்கி, அதன் மூலம் அவர்களின்வாழ்வதாரத்தை உயர்த்துவது தான் நோக்கமே தவிர, வாடிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம் கடன் வழங்கி அவர்களை கடனாளிகளாக மாற்றுவதுஎங்களுடைய நோக்கமல்ல, ஒருவரால் அவர் பெற்ற கடனை திரும்ப செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு, அதன்பின் தான் அவருக்கானகடன்தொகை வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்