திருச்சி மாவட்டம் லால்குடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிஸ்டர் சவுத் இந்தியா, மிஸ்டர் கே என் அருண் நேரு கிளாசிக் 2023, ஆணழகன் போட்டி இந்தியா ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகள் ஜூனியர், சீனியர், ஃபிட்னஸ், மாஸ்டர்ஸ், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஓபன் திருச்சி, என தனித்தனியாக மொத்தம் எட்டு பிரிவுகளாக நடைபெற்றது.
இந்த ஆணழகன் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த நடராஜூ முதலிடம் பிடித்து மிஸ்டர் தென்னிந்தியா பட்டத்தை வென்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர்களான ஷேக் பரித் 2 ம் இடமும், கோபி கிருஷ்ணன் 3 ம் இடம் பிடித்தனர்.
இவர்கள் மூன்று பேருக்கும் பதக்கம், சான்றிதழ்களை கவுன்சிலர் முத்து செல்வம் வழங்கினார். ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்த ஆணழகன் போட்டியை இந்திய ஃபிட்னஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த விமலநாதன் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர்.