இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இணையதளத்தில் முன்பதிவு செய்தும், நேரடியாக சென்றும் 12 வயது முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் போடப்பட்டு வரும் நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் 25-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் படிப்படியாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். இந்த வயதுக்குட்பட்ட சுமார் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பி வேக்ஸ் தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கு இடையில் 28 நாட்கள் கால இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.