கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹம்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர். இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். அப்பொழுது விவசாய நிலைத்தில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அருகே உள்ள மக்களை அங்கு அழைத்தார். அவர்கள் அங்கு வந்து குச்சியால் அசைவற்று கிடந்த பாம்பை மெதுவாக நகர்த்த தொடங்கிய நிலையில் பாம்பு சீற தொடங்கியது. இதையடுத்து அனைவரும் சேர்ந்து குச்சியாலும், கல்லாலும் பாம்பை வயிற்று பகுதியில் பலமாக அடித்தனர். வலியால் துடிதுடித்த பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது. அப்போது யாரும் எதிர்பாராமல் இருந்த நிலையில் திடீரென இறந்த பாம்பின் வயிறு வெடித்து பாம்பு குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன. மொத்தமாக 50 குட்டிகள் வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அங்கு வந்த வனத்துறையினர், 50 பாம்பு குட்டிகளையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.