தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி தென்னூர் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியுமான மைதீன் சேட்கான் தேர்தலை நடத்தினார்
இதில் மாவட்ட தலைவராக பைஸ் அகமது, மாவட்ட தமுமுக செயலாளராக இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளராக இப்ராஹிம், மாவட்ட பொருளாளராக ஹிமாயூன் கபீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக மாநில பொருளாளர் சபியுல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேசுகையில்…
உபா சட்டம் மற்றும் என்.ஐ.ஏ மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. எனவே என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும், உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாகவும் போட்டி அரசு போல நடத்தும் ஆளுநரை கண்டித்தும், ஆளுநர் பொறுப்பை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ரகசிய செயல்பாடுகளை கொண்ட அமைப்பு, இந்திய அரசியலமைப்பை எதிர்க்கும் அமைப்பு இந்த அமைப்பு தமிழகத்தில் காலூன்ற கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். ரெட் கிராஸ் போன்ற அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது என கூறும் கருத்து தவறு. மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடும் அமைப்பு அதை ரெட் கிராஸ் போன்ற அமைப்போடு ஒப்பீட முடியாது.
தமிழ்நாடு அரசை விமர்சித்த வேறு எந்த காரணங்களும் இல்லாததால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குறை கூறி வருகிறார் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்