ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் அமலில் உள்ளது. ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது தவறாகும். ஒரு தாய் குழந்தையை பிரசவித்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையாக இருந்தால் குழந்தை பிறந்து 2 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை மஞ்சள் நிற பாலில் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் கூடுதல் ப்ரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில் இன்று காலை திருச்சி அண்ணல் காந்தியடிகள் அரசு மருத்துவ மனையில் மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிகும் வகையில்

தாய்ப்பால் ஊட்டுவதை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் தாயின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் பேரணி நடைபெற்றது.பேரணியை கல்லூரி முதல்வர் நேரு துவக்கி வைத்தார். பேரணி மருத்துவ வளாகத்திலிருந்து புறப்பட்டு நீதிமன்றம் ரவுண்டானா வரை சென்று திரும்பியது.பேரணியில் தாய்ப்பால் வழங்குவதை ஊக்குவிப்போம் என்ற பதாகைகளை ஏந்தி மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர்கள் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *