மே 28 உலக பட்டினி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் அவ்வகையில் திருச்சி கீழப்புலி வார்டு ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் கோவில் தெருவில் நடைபெறும் அன்னதான நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொது செயலாளர் புஸ்ஷி ஆனந்த் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தார்…
முன்னதாக ஈபி ரோடு சாலையிலிருந்து புஸ்ஸி ஆனந்தை வரவேற்க ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் சால்வை அனுபவித்தும் வரவேற்றனர்..பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை அவரை ஒட்டிக்கொண்டு அன்னதானம் போடும் இடத்திற்கு வந்தார் அங்கு அவருக்கு பெண்கள் பூரண கும்பம் மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து ரோஜா இதழ் பூக்களை தூவி வரவேற்றனர். அன்னதானத்தை தொடங்கி வைத்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணியை பரிமாறினார் பின்னர் குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்…
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் : இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது – இதே போல் கேரளா ஆந்திரா, மற்றும் புதுவையிலும் இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்தும் திருச்சி விஜய் ரசிகர்கள் திருப்பு முனை மாநாடு நடத்தபப்டும் என சுவர் விளம்பரம் செய்து இருந்தனர் இது போன்ற மற்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் நகர்ந்து சென்று விட்டார்.