திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மகளிர் தினம் தூய்மை பணியாளர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது பெண்மையை போற்றும் விதமாக பெண்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு உறவு முறைகளில் அவர்களில் தியாகம் அன்பும் போற்றுதலுக்கு உரியதாகும் ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தாயாக மனைவியாக சகோதரியாக நண்பர்கள் மத்தியில் நல்ல தோழியாக நம் அனைவரின் வாழ்விலும் உறவு நட்பு முறையில் வாழ்ந்து வருகிறார்கள் அப்படி பல்வேறு தியாகங்களை செய்து வாழும் பெண்களை சர்வதேச மகளிர் தினத்தில் மட்டும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டாமல் செயலாள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை அவர்களின் முயற்சி சாதனைகளை ஊக்குவித்து பாராட்டி அவர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் பாராட்டு போற்ற வேண்டும்.

அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கி ஒவ்வொரு நாளும் பாராட்ட வேண்டும். இதுவே உலக மகளிர் தினத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் இதனை வலயூறுத்தும் விதமாக உலக மகளிர் தினத்தில் திருச்சி பொன்மலைபட்டி மாவடிகுளம் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் பெண்களை அவர்களின் உன்னத சேவையை பணியினை பாராட்டும் விதத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் அவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காட் சமூக சேவை அமைப்பின் தலைவர் சுப்பையா பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார்.

 இந்நிகழ்வில் தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹெப்சி சத்தியா ராக்கினி மார்கரெட் தின சேவை அறக்கட்டளையின் தலைவர் சிவ பிரகாசம் பகவதி மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கார்த்திகா வழக்கறிஞர் சதிஷ் ஜான் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரும் தேசிய மாநில விருதுகளை வென்ற இயக்குனரும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் சமூக செயற்பாட்டாளர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களின் பணிகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்