ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை மற்றும் பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் சென்று நேரத்தை செலவிடுவார்கள்.மேலும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி அரசு சார்பில் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கின் காரணமாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.