தமிழகத்தில் கொரோனாவின் 3-ம் அலை மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில். இன்று காலை முதல் திருச்சியின் பல்வேறு பகுதிகளான மத்திய பஸ் நிலையம், தலைமை தபால் நிலையம் சிக்னல், காந்தி மார்க்கெட் நேப்பியார் பாலம் தெப்பக்குளம் என்எஸ்பி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.