உலகையே அச்சுறுத்தும் ” கொரோனா வைரஸ் -2 வது அலை ” பரவுவதை தடுக்க திருச்சி மாவட்டம் சார்பாக பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது . கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காகவும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் எல்லை சோதனை சாவடி 20 இடங்களிலும் , வாகனங்கள் சோதனை செய்யும் இடம் 16 இடங்களிலும் , முக்கியமான 84 இடங்களில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டும் 30 இடங்களில் இருச்கர வாகனம் ரோந்து மற்றும் 15 நான்கு சக்கர வாகன ரோந்து அமைக்கப்பட்டு அதில் 800 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உதவியாக சுமார் 300 ஊர்காவல்படை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றார்கள் .