இதுகுறித்து தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன காளையை அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்தனர், துவரங்குறிச்சி காவல் நிலையம் சென்று தன்னை தாக்கிய நபர்கள் மீது புகார் கொடுத்தும் புகாரைபெற காவல்துறையினர் மறுத்துவிட்டனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு வந்த காவல் அதிகாரியிடம் வாய்மொழியாக புகார் கொடுத்து உள்ளார். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும் அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன காளை மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பொருளாதாரத்திலும் சாதியிலும் பலமாக உள்ளதால் மேற்கண்ட எதிரிகளால் சின்னகாளை உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவேநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன காளைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.